அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி - 620003, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Vekkaliamman Temple, Thiruchirappalli - 620003, Thiruchirappalli District [TM025708]
×
Temple History
தல பெருமை
உறையூரை தலைமையிடமாக கொண்டு வன் பராந்தகன் தன் தேவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்து வந்தார், அப்போது சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து செவ்வந்தி மலர்களை பயிரிட்டு அதனை தாயுமானசுவாமிக்கு அணிவித்து வழிபட்டு வந்தார். பராந்தகன் எனும் பூவணிகன் அரசன்பால் ஆதரவு பெற எண்ணி நந்தவனத்து மலர்களை பறித்து அரசிக்கு அளிக்க தொடங்கினான். நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதை கண்ட மாமுனி ஒரு நாள் மறைந்து நின்று பூவணிகன் மலர் கொய்து செல்வதை அறிந்து மன்னரிடம் முறையிட்டார். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்கவே மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடம் முறையிட்டார்.
தனக்கு செய்யும் குறைகளை கூடத் தாங்கிக்கொள்ளும் தாயுமானவன் அடியார்க்கு செய்கின்ற இடர்களை தாங்குவதில்லை. கிழக்கு...உறையூரை தலைமையிடமாக கொண்டு வன் பராந்தகன் தன் தேவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்து வந்தார், அப்போது சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து செவ்வந்தி மலர்களை பயிரிட்டு அதனை தாயுமானசுவாமிக்கு அணிவித்து வழிபட்டு வந்தார். பராந்தகன் எனும் பூவணிகன் அரசன்பால் ஆதரவு பெற எண்ணி நந்தவனத்து மலர்களை பறித்து அரசிக்கு அளிக்க தொடங்கினான். நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதை கண்ட மாமுனி ஒரு நாள் மறைந்து நின்று பூவணிகன் மலர் கொய்து செல்வதை அறிந்து மன்னரிடம் முறையிட்டார். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்கவே மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடம் முறையிட்டார்.
தனக்கு செய்யும் குறைகளை கூடத் தாங்கிக்கொள்ளும் தாயுமானவன் அடியார்க்கு செய்கின்ற இடர்களை தாங்குவதில்லை. கிழக்கு நோக்கி வீற்றிருந்த இறைவன் மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கி மண்மாரி பொழியச் செய்தார். உயிருள்ளன ஒடிப் பிழைக்க முற்பட்டன. மண்மூடியது. மக்கள் தங்களின் உயிர் காக்க எல்லை தெய்வமாம் வெக்காளி அம்மனை விட்டால் வேறு வழியில்லை என ஓலமிட்டு சரணடைந்தனர். அன்னை தாயுமானவரை வேண்டினாள். மண்மாரி நின்றது. ஆனாலும் மக்கள் வீடிழந்தனர். வெட்ட வெளியே தங்குமிடமானது. மக்களின் துயர் கண்டு அன்னை வெக்காளி உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப்போல வெட்ட வெளியில் இருக்கிறேன் என்று அருளியதாக வரலாறு கூறுகிறது.