இத்திருக்கோயிலில் புகழ்பெற்ற பிரார்த்னை ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் அருள்மிகு வெக்காளியம்மன் வானமே கூரையாக வெட்ட வெளியில் அமர்ந்து வேண்டு வோருக்கு வேண்டுவென அளித்து அருள்புரிந்து வருகிறார். ,இத்திருத்தலத்தில் அருள்மிகு வெக்காளியம்மன் மதுரையில் கால்மாற்றி நடனமாடிய நடராஜர போல் கால் மாறி அமர்ந்திருப்பார்.வலது காலை மடித்து இடது காலை அசுரன் மேல் ஊன்றி அமர்ந்திருப்பது சுகாசனம் எனப்படும் சுகாசனத்தில் எழுந்திருளியுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் மங்கள பலன்கள் மிக அதிகமாக தனது பக்தர்களுக்கு வழங்கி அருள் பாலித்து வருகிறார்.